Pages
▼
Thursday, 26 June 2014
"பிற மதத்தவர்களுடன் நல்லிணக்கம்" _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 26.06.2014 அன்று சகோ.ஜின்னா அவர்கள் "பிற மதத்தவர்களுடன் நல்லிணக்கம்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
பிற மதத்தவர்களின் கடவுள்களை ஏசக்கூடாது
பிற மதக் கடவுள்களைத் திட்டக் கூடாது என்று திருகுர்ஆன் வசனம் (6:108) கூறுகின்றது.
பிற மதத்தவர்களின் கடவுள்களை ஏசக்கூடாது
பிற மதக் கடவுள்களைத் திட்டக் கூடாது என்று திருகுர்ஆன் வசனம் (6:108) கூறுகின்றது.
அகில
உலகுக்கும் ஒரே ஒரு கடவுள் தான் இருக்க முடியும் என்பது இஸ்லாத்தின்
அடிப்படைக் கொள்கையாகும். இக்கொள்கையில் முழு அளவுக்கு இஸ்லாம் உறுதியாக
நிற்கின்றது.
அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படும் அனைத்தும் கற்பனைகளே தவிர கடவுள்கள் அல்ல எனவும் இஸ்லாம் அடித்துக் கூறுகிறது.
ஆனாலும்
முஸ்லிமல்லாதவர்கள் தெய்வமாக நம்புவோரைப் பற்றி தரக் குறைவாக விமர்சிப்பதோ,
ஏசுவதோ கூடாது என்றும் திட்டவட்டமாக இஸ்லாம் அறிவிக்கிறது.
முஸ்லிமல்லாதவர்கள்
எவ்வளவுதான் வம்புக்கு இழுத்தாலும் அவர்கள் புனிதமாகக் கருதுவோரை
எக்காரணம் கொண்டும் ஏசக் கூடாது எனக் கூறி பல்சமய மக்களிடையே
நல்லிணக்கத்துக்கு வழி வகுக்கிறது.