Pages

Saturday, 16 November 2013

அணுகுண்டு பற்றிய முன்னறிவிப்பு

திருக்குர்ஆன் 105வது அத்தியாயம் 
 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்னர் மக்காவில் நடந்த ஓர் அதிசய நிகழ்வைக் கூறுகிறது. இறைவனை வணங்குவதற்காக  
 
உலகில் முதன் முதலில் எழுப்பப்பட்ட ஆலயம் கஅபா ஆகும். இந்த ஆலயத்தில் வழிபாடு நடத்த திரளான மக்கள் வந்து செல்வதில் பொறாமைப்பட்ட அப்ரஹா என்ற மன்னன், கஅபாவை இடித்துத் தகர்க்க யானைப் படையுடன் வந்தான். கஅபா ஆலயத்தை யானைப் படையினர் அழித்து விடாமல் தடுத்து அபாபீல் எனும் பறவைகள் மூலம் இறைவன் அந்தப் படையினரை அழித்தான். அப்பறவைகள் சூடான சிறு கற்களை யானைப்படை மீது வீசி அவர்களை மெல்லப்பட்ட வைக்கோல் போல் ஆக்கி விட்டன. 
இந்த வரலாற்றைத்தான் இந்த அத்தியாயம் குறிப்பிடுகின்றது. 


இந்த நிகழ்ச்சி நடந்த ஆண்டில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த ஆண்டில் இது நடந்ததால் சிறு வயதிலேயே இந்த நிகழ்ச்சி பற்றி நபியவர்கள் கேட்டு அறிந்திருந்தார்கள். மக்காவைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் இது தெரிந்த நிகழ்ச்சியாகவே இருந்தது. இந்த நிகழ்ச்சி நடந்த பின் இதிலிருந்து மக்கள் ஆண்டுக் கணக்கைத் துவக்கினார்கள். அரபுகள் அனைவருக்கும், நபிகள் நாயகத்துக்கும் இது நன்றாகத் தெரிந்திருக்கும் போது, அவர்களுக்கே இதைச் சொல்லிக் காட்டுவது தேவையில்லை. அரபுகள் அறிந்து வைத்திருந்ததை விட மிகக் குறைவான விபரத்தைத்தான் இந்த அத்தியாயம் கூறுகின்றது. எனவே இந்தச் சம்பவத்தை அவர்களுக்குச் சொல்வது இதன் நோக்கமில்லை. மனிதர்கள் அறிந்து கொள்ள வேண்டிய, மனிதர்கள் சிந்திக்க வேண்டிய இரண்டு செய்திகள் இதில் உள்ளன; அவற்றைச் சிந்திக்கச் சொல்வது தான் இதன் நோக்கமாக இருக்க முடியும். 
கடந்த காலத்தில் நான் எனது அருளைச் சொரிந்து உங்களை அதிசயமான முறையில் பாதுகாத்தேன், அதை எண்ணிப் பார்த்து நன்றி செலுத்துங்கள் என்பது முதலாவது செய்தி. இன்னொரு செய்தி ஆழமாகச் சிந்திக்கும் போது விளங்கும் செய்தி. சிந்தனையைச் செலுத்த வேண்டிய ஒரு செய்தி இதனுள் அடங்கியிருக்கிறது என்பதற்காகவே நீர் கவனிக்கவில்லையா என்று இந்த அத்தியாயம் துவங்குகிறது. 
யானை மிகப் பெரிய உயிரினம். அவற்றைச் சிறிய உயிரினமான பறவை இனம் அழித்த விதத்தைப் பற்றித்தான் இந்த அத்தியாயம் சிந்திக்கச் சொல்கிறது. அப்பறவைகள் தமது அலகுகளில் தாங்கி வந்த கற்கள் சாதாரணக் கற்கள் அல்ல. அதிக வெப்பமுடைய கற்கள் என்று குர்ஆன் கூறுகின்றது. இது வெளிவெப்பத்தைக் குறிக்காது. ஏனெனில், வெளிப்படையான வெப்பம் என்றால் யானைகளை அழிக்கும் அளவுக்கு வெப்பத்தைப் பலவீனமான அப்பறவைகளால் எப்படித் தாங்கியிருக்க முடியும்? மேலும் வெளிவெப்பமுடைய கற்களாக இருந்தால் அவை தரையில் விழுவதற்குள் சூடு ஆறியிருக்கும். அக்கற்களால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. எனவே, கீழே விழுந்து வெடித்துச் சிதறும் போது ஏற்படும் வெப்பத்தையே இது குறிக்கிறது. சக்தி வாய்ந்த அணுகுண்டுகளில் அதிக வெப்பம் இருந்தாலும் அவை வெடிக்கும் போதுதான் அந்த வெப்பம் பாதிப்பை ஏற்படுத்தும். வெடிக்காத வரை சாதாரண பொருளைப் போல் அவற்றைத் தொடலாம். இந்த நிகழ்ச்சியில், பறவைகள் வீசிய சிறு கற்கள் யானைப் படையைக் கூழாக ஆக்கி விட்டது என்றால் அக்கல்லுக்குள் கடுமையான சக்தி அழுத்தி வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இதைத்தான் இறைவன் இங்கு சிந்திக்கச் சொல்கிறான். 
உலகிலுள்ள அனைத்துப் பொருட்களும் அணுக்களால் ஆனவை. அந்த அணுக்களையும் உடைத்தால் அதில் இருந்து மாபெரும் சக்தி வெளிப்படும் என்று மனிதன் இப்போது கண்டுபிடித்து விட்டான். சிறிய அளவு அணுகுண்டு ஒரு ஊரையே அழிக்கப் போதுமானது என்றும் நிரூபித்துக் காட்டிவிட்டான். அந்தக் குண்டுகளை உயரமான இடத்திலிருந்து போட்டால் குண்டு வீசியவர்களைப் பாதிக்காது. தரையில் இருந்து போட்டால், குண்டு போட்டவர்களும் அழிந்து போய் விடுவார்கள். இந்த உண்மைகள் அனைத்தையும் உள்ளடக்கும் விதமாகத்தான் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. 
மனிதர்களே! நீங்கள் முயற்சித்தால் அதிக வெப்பத்தை வெளிப்படுத்தும் சக்தியை சிறிய பொருளுக்குள் அடக்க முடியும். அப்பொருளை வெடிக்க வைத்து எதனையும் அழிக்க இயலும். உங்களுக்கு அழிவு ஏற்படாத வகையில் இதைச் செய்ய முடியும். இவற்றைப் பற்றிக் கொஞ்சம் சிந்தியுங்கள் என்று சொல்வது போல 

இந்த (105வது) அத்தியாயம் அமைந்துள்ளது.

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/thamizakam/355_anukundu_patriya_munnarivippu/
Copyright © www.onlinepj.com

மங்கலம் கிளை பெண்கள் குழு தஃவா _தாயத்தை தஃவா செய்து அகற்றினர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 16-11-2013 அன்று கிடங்குத்தோட்டம் பெண்கள் குழுவாக சென்று 25 வீடுகளில் குழு தஃவா செய்தனர். அப்போது மூன்று பெண்கள் தங்கள் கையில் கட்டியிருந்த தாயத்தை தஃவா செய்து அகற்றினர்

தமிழகஅரசே! நடவடிக்கை எடு!! _உடுமலை கிளை போஸ்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்உடுமலை கிளை சார்பில் 15.11.2013 அன்று   தமிழகஅரசே! நடவடிக்கை எடு!!
அதிமுக இணையதளத்தை முடக்கி அதன் பழியை முஸ்லிம்களின் மீது சுமத்தி தமிழகத்தில் கலவரத்தை தூண்ட துடிக்கும் பி.ஜே.பி,ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் மீது  
தமிழகஅரசே! நடவடிக்கை எடு!!
எனும் போஸ்டர் நகரின் முக்கிய இடங்களில்ஒட்டப்பட்டது.

விருதுநகர் மாவட்டபள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.2600/= நிதிஉதவி _வடுகன்காளிபாளையம்கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   வடுகன்காளிபாளையம் கிளை சார்பில் 15.11.2013 அன்று விருதுநகர் மாவட்டம் அஹமதுநகர் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.2600/= நிதிஉதவி வழங்கப்பட்டது.

"இஸ்லாம் கூறும் வீரம் " _நல்லூர் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர்  கிளையின் சார்பாக 15.11.2013 அன்று பயான்  நடைபெற்றது.
இதில் சகோ.சபியுல்லாஹ்  அவர்கள் "இஸ்லாம் கூறும் வீரம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். 
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

அழைப்புப் பணி _மங்கலம் கிளை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 15-11-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் அழைப்புப் பணி என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

ஏழை சகோதரிக்கு தையல் மெசின் _வடுகன்காளிபாளையம் கிளை வாழ்வாதாரஉதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பில் 15.11.2013 அன்று 2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும் தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து வடுகன்காளிபாளையம் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரி க்கு தையல் மெசின்  வாழ்வாதாரஉதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

ஜோதிடத்தை நம்புவது ஒரு பெரும்பாவம் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 16-11-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் ஜோதிடத்தை நம்புவது ஒரு பெரும்பாவம் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

"முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள்" _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 13-11-2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை ரம்யா கார்டனில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் "முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

தமிழகஅரசே! நடவடிக்கை எடு!!போஸ்டர் _வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பில் 14.11.2013 அன்று 
 

தமிழகஅரசே! நடவடிக்கை எடு!!
அதிமுக இணையதளத்தை முடக்கி அதன் பழியை முஸ்லிம்களின் மீது சுமத்தி தமிழகத்தில் கலவரத்தை தூண்ட துடிக்கும் பி.ஜே.பி,ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் மீது  
தமிழகஅரசே! நடவடிக்கை எடு!!
எனும் போஸ்டர் நகரின் முக்கிய இடங்களில்ஒட்டப்பட்டது.

விருதுநகர் மாவட்டபள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.2250/= நிதிஉதவி _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   தாராபுரம் கிளை சார்பில் 15.11.2013 அன்று விருதுநகர் மாவட்டம் அஹமதுநகர் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.2250/= நிதிஉதவி வழங்கப்பட்டது.

அஹமதுநகர் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.2190/= நிதிஉதவி _காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   காங்கயம்கிளை சார்பில் 15.11.2013 அன்று விருதுநகர் மாவட்டம் அஹமதுநகர் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.2190/= நிதிஉதவி வழங்கப்பட்டது.

குர்ஆன் வகுப்பு _வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பில் 15.11.2013 அன்று வடுகன்காளிபாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில் பஜ்ர் க்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  

பள்ளிக்கு வந்த சகோதரர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் பயன் பெறும் வகையில் ஒலிபெருக்கி மூலம் திருகுர்ஆன் தமிழாக்கம்  19:21வசனம் முதல்  19:40 வசனம்வரை  படிக்கப்பட்டது.  
அல்ஹம்துலில்லாஹ்

பெற்றோரை அவமதிப்பது ஒரு பெரும்பாவம் _மங்கலம் கிளை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 15-11-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் பெற்றோரை அவமதிப்பது ஒரு பெரும்பாவம் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

ஏழை சகோதரருக்கு ரூ.6000/= வாழ்வாதாரஉதவி _வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பில் 14.11.2013 அன்று 2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும் தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து வடுகன்காளிபாளையம் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரருக்கு ரூ.6000/= வாழ்வாதாரஉதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

"முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள்" _மங்கலம் கிளைபெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 11-11-2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை இந்தியன் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.
 இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் "முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

இறையச்சம் _மங்கலம் கிளைபயான்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 14-11-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் இறையச்சம் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது`

"தனிமனித ஒழுங்குகள் " _நல்லூர் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர்  கிளையின் சார்பாக 14.11.2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.தீன் அவர்கள் "தனிமனித ஒழுங்குகள் " என்ற தலைப்பில் உரையாற்றினார். 
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்