Pages

Sunday, 31 March 2013

"நிர்வாகிகளுக்கு இருக்க வேண்டிய பண்புகள் " _திருப்பூர் மாவட்ட தொண்டரணி தர்பியா -31032013

திருப்பூர் மாவட்ட தொண்டரணி  சார்பில்  31.03.2013அன்றுமாவட்ட தலைமையகத்தில்  சகோ.முஜிபுர்ரஹ்மான்  அவர்கள் "நிர்வாகிகளுக்கு இருக்க வேண்டிய பண்புகள்  " எனும் தலைப்பில் தொண்டரணி நிர்வாகிகளுக்கு தர்பியா பாடம் நடத்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

"வீண்விரயம் " காலேஜ்ரோடு கிளைபெண்கள் பயான் -31032013

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பில் 31.03.2013அன்று  காலேஜ்ரோடு G.K. கார்டன் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
அதில் "வீண்விரயம் " எனும் தலைப்பில் சகோதரி.சுலைகா  அவர்கள்உரைநிகழ்த்தினார்.

"மரண சிந்தனை " _பெரிய தோட்டம் கிளையில் பெண்கள் பயான் _31032013

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பில்  31.03.2013அன்று பெரிய தோட்டம் கிளையில்  பெண்கள் பயான் நடைபெற்றது.
"மரண சிந்தனை " எனும் தலைப்பில் சகோதரி.ஆலிமா நஸ்ரின்   அவர்கள்உரைநிகழ்த்தினார்.

பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள் _பெரிய தோட்டம் கிளைதர்பியா _31032013

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பில்  31.03.2013அன்று பெரிய தோட்டம் கிளையில் மதரசா குழந்தைகளுக்கு சகோ.சபியுல்லாஹ் அவர்கள் "பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள் " எனும் தலைப்பில் நல்ஒழுக்கபயிற்சிகள் குர்ஆன் ஹதீஸ் விளக்கங்களுடன்
தர்பியா பாடம் நடத்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குழந்தை வளர்ப்பு _V.K.P.கிளைபெண்கள் பயான் _24032013

திருப்பூர் மாவட்டம் V.K.P.கிளை சார்பில்  24.03.2013அன்று  
V.K.P.கிளை  பள்ளியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
"குழந்தை வளர்ப்பு  " எனும் தலைப்பில் சகோதரி.சுமையா  அவர்கள்உரைநிகழ்த்தினார்.

ஈமானும்,இணைவைப்பும் _மதரசா குழந்தைகளுக்குதர்பியா _ V.K.P._17032013

திருப்பூர் மாவட்டம் V.K.P. கிளை சார்பில்  17.03.2013அன்று V.K.P.கிளையில் மதரசா குழந்தைகளுக்கு சகோ.மங்கலம் சலீம்  அவர்கள் "ஈமானும்,இணைவைப்பும்" எனும் தலைப்பில் நல்ஒழுக்கபயிற்சிகள் குர்ஆன் ஹதீஸ் விளக்கங்களுடன்
தர்பியா பாடம் நடத்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

மதரசா குழந்தைகளுக்குதர்பியா _V.K.P. _10032013


திருப்பூர் மாவட்டம் V.K.P. கிளை சார்பில்  10.03.2013அன்று V.K.P.கிளையில் மதரசா குழந்தைகளுக்கு சகோ.அப்துல்ஹமீது அவர்கள் நல்ஒழுக்கபயிற்சிகள் குர்ஆன் ஹதீஸ் விளக்கங்களுடன்
தர்பியா பாடம் நடத்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

S.V. காலனி கிளை அவசர செயற்குழு _31032013


திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில்  31.03.2013அன்று S.V.காலனி பள்ளியில் அவசர செயற்குழு நடைபெற்றது.கிளையின் பள்ளி இடம் கிரயம் செய்வது சம்பந்தமாக,மாவட்ட செயலாளர் ஜாகிர்அப்பாஸ் அவர்கள் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் ஹதீஸ் _தர்பியா _ M.S.நகர் -31032013


திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில்  31.03.2013அன்று M.S.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்
சகோ.ஜபருல்லாஹ் அவர்கள் குர்ஆன் ஹதீஸ் விளக்கங்களுடன்
தர்பியா பாடம் நடத்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 30 March 2013

தாராபுரம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற பரிமளம் ...ஆயிஷா வாக... -30032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையில் பரிமளம் என்பவர் 30.03.2013 அன்று தூய இஸ்லாமிய மார்க்கத்தை  ஏற்றுக்கொண்டு தனது பெயரை ஆயிஷா   என மாற்றிக்கொண்டார் .
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகள் குறித்த விளக்கங்கள் கிளை சகோதரர்களால் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

S.V.காலனி கிளையின் பள்ளிவாசல் இடத்திற்காக நிதியுதவி _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக 29-03-2013 அன்று திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் பள்ளிவாசல் இடத்திற்காக 27430/= ரூபாய் நிதியுதவி செய்யப்பட்டது

Friday, 29 March 2013

அல்லாஹுவிற்க்குஇணை கற்ப்பித்தல் பெரும்பாவம் _நல்லூர்கிளை தெருமுனை பிரச்சாரம் -28032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர்கிளை சார்பாக 28.03.2013 அன்று நல்லூர் மணிகாரம்பாளையம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்.பிலால் அவர்கள் "அல்லாஹுவிற்க்குஇணை கற்ப்பித்தல் பெரும்பாவம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்


குழந்தை வளர்ப்பு -மங்கலம் கிளைபெண்கள் பயான் _26032013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 26-03-2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை பல்லடம் ரோட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஃபாஜிலா தொழுகை என்ற தலைப்பிலும் சகோதரி சுமையா குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

என்னை கவர்ந்த இஸ்லாம் _மங்கலம் கிளை பெண்கள் பயான் _25032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 25-03-2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை கொள்ளுக்காட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள்  "முன் மாதிரி முஸ்லிம் பெண்கள்" என்ற தலைப்பிலும்
சகோதரி சல்மா (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சகோதரி) அவர்கள்  "என்னை கவர்ந்த இஸ்லாம்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்

S.V.காலனி கிளை பள்ளிவாசல் இடத்திற்காக நிதியுதவி -மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 29-03-2013 அன்று திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் பள்ளிவாசல் இடத்திற்காக 2610 ரூபாய் நிதியுதவி செய்யப்பட்டது

இஸ்லாமியத் திருமணம் _மங்கலம் கிளை இலவச புத்தக விநியோக தஃவா _25032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 25-03-2013 அன்று கொள்ளுக்காடு என்ற  பகுதியில் வரதட்சனை அதிகமாக இருப்பதால் அப்பகுதியில் இலவசமாக இஸ்லாமியத் திருமணம் புத்தகங்கள் 19 விநியோகம்
தஃவா செய்து வழங்கப்பட்டன.

பித்-அத் _நல்லூர்கிளை தெருமுனை பிரச்சாரம் _28032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர்கிளை சார்பாக 28.03.2013 அன்று நல்லூர்V.S.A.நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்.பிலால் அவர்கள் "பித்-அத்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்

Thursday, 28 March 2013

அண்டைவீட்டார் _பெரிய தோட்டம் கிளைதெருமுனை பிரச்சாரம் _27032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 27.03.2013 அன்று பெரிய தோட்டம்பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்.சபியுல்லாஹ் அவர்கள் "அண்டைவீட்டார்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்

கட்டாய கல்வி உரிமை சட்டம் பற்றிய விழிப்புணர்வு போஸ்டர் _திருப்பூர் மாவட்டம் _27032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  மாணவரணி சார்பாக 27.03.2013 அன்று கட்டாய கல்வி உரிமை சட்டம் பற்றிய விழிப்புணர்வு போஸ்டர் மூலம் கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம்செய்யப்பட்டது.

இறைஅச்சம் _வெங்கடேஸ்வராநகர் கிளை தெருமுனை பிரச்சாரம் _27032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை சார்பாக27.03.2013 அன்று வெங்கடேஸ்வராநகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்.சாஹிது ஒலி   அவர்கள் "இறைஅச்சம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்

இலவச இரத்த அழுத்தம் மற்றும் இரத்தபிரிவு கண்டறியும் முகாம் _நல்லூர் _27032013

 

திருப்பூர் மாவட்டம் நல்லூர்  கிளை  மருத்துவ அணி சார்பாக 27.03.2013 அன்று நல்லூர்  பகுதியில் இலவச இரத்த அழுத்தம் மற்றும் இரத்தபிரிவு கண்டறியும்  முகாம்  நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து தமது இரத்த பிரிவு மற்றும் இரத்த அழுத்த இலவச பரிசோதனை செய்து பயன்பெற்றனர்.

Wednesday, 27 March 2013

இணைவைப்பு -வெங்கடேஸ்வராநகர் கிளை தெருமுனை பிரச்சாரம் -26032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை சார்பாக26.03.2013 அன்று வெங்கடேஸ்வராநகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்.பசீர்  அவர்கள் "இணைவைப்பு" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்

ஒழுக்கம் _செரங்காடுகிளைதெருமுனை பிரச்சாரம் _26032013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடுகிளை சார்பாக26.03.2013 அன்று செரங்காடுபகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்.முஹம்மதுபிலால் அவர்கள் "ஒழுக்கம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

ஏப்ரல் ஃபூல் _ம்-முஸ்லிம்களும் ,ஏமாற்றாதீர்கள்! ஏமாறாதீர்கள்!!

ஏப்ரல் 1 என்றாலே ஏமாற்றுதல் என்று பொருள் மாறும் அளவிற்கு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி மாறிவிட்டது.
அன்று உலகம் முழுவதும் ஒருவர் மற்றவரிடம் நம்பவைத்து பொய் சொல்லி, நம்பிய  பிறகு ஏமாற்றி, அவரை பார்த்து மற்றவர்கள் ஏளனமாகச் சிரித்து மகிழ்வதை  வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
இவர்கள் பிறரை ஏப்ரல் ஃபூல் – முட்டாளாக்கி  இழிவுபடுத்துவதில் அளாதி இன்பம் அடைக்கின்றனர்.

April Fool’s Day அல்லது All Fool’s Day என்ற ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஏப்ரல் ஃபுல் க்கு பல வரலாறுகள் சொல்லப்படுகின்றது
முஸ்லிம்களில் சிலரும் அன்ற தினத்தில் நண்பர்களை ஏமாற்றி ஏப்ரல் ஃபூல் – முட்டாளாக்கி மகிழ்கின்றனர்.
எனவே நாம், நமக்கு வழிகாட்டியாக வந்த குர்ஆனையும், ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீமையைப் பற்றி அறிந்து, அதிலிருந்து விலகவும், நேர்வழி பெறவும் முயற்சிக்க வேண்டும்.
ஹோலி கலாச்சாரம்
பொதுவாக மாணவர்கள் ஏப்ரல் மாதத்தில் பிறருடைய மேலாடைகள் மீது மையைத் தெளித்து அசிங்கப் படுத்துகின்றார்கள். இதை ஏப்ரல் ஃபூலின் ஓர் அடையாளமாக நினைத்து செய்கின்றனர். மையைத் தெளிக்கும் இந்த நடைமுறையானது ஹோலி பண்டிகையின் போது நிறங்களை பரஸ்பரம் வீசிக் கொள்ளும் இந்துக்களின் ஒரு பிரிவினருடைய கலாச்சாரத்துடன் ஒத்துப் போகின்றது. எனவே மாற்று மதக் கலாச்சாரம் என்ற அடிப்படையில் முஸ்லிம்கள் இதைக் கைவிட வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பிற சமுதாயத்தின் சம்பிரதாயங்களை (கலாச்சாரத்தை) ஏற்படுத்திக் கொள்கிறானோ அவனும் அவர்களைச் சார்ந்தவனே! (நூல்: அபூதாவூத் 3512)
பொய்க் கலாச்சாரம்
இதைத் தவிர மக்களில் பலர் மற்றவர்களை ஏப்ரல் ஃபூல் (முட்டாள்) ஆக்குவதற்காக பொய் பேசுகின்றார்கள். இது பெருங்குற்றம் ஆகும். பொய் சொல்லி தீமை செய்து கொண்டிருப்பதன் காரணமாக அல்லாஹ்வின் அருளும் அன்பும் இழந்து அவனது கோபத்திற்கு ஆளாகி விடுகின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழி வகுக்கும். தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக் கொண்டே இருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் பெரும் பொய்யன் என்று பதிவு செய்யப்பட்டு விடுவார்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி)
நூல்: புகாரி 6094
ஆக இந்தப் பொய்யர்கள் அதிகமான தீமைகளைச் செய்து நரகத்தை அடைகின்றனர். எனவே நாம் பொய் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பொய்ச் சத்தியம் செய்தல்
இன்னும் சிலர் பிறரை முட்டாளாக்குவதற்கு முயற்சி செய்யும் போது அவர் நம்ப மறுத்து விட்டால் உடனே பொய்ச் சத்தியம் செய்து நம்ப வைக்கின்றனர்.
இவர்களைப் பற்றி வல்ல அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்:
அதிகம் சத்தியம் செய்யும் இழிந்தவன் எவனுக்கும் நீர் கட்டுப்படாதீர்! (அல்குர்ஆன் 68:10)
மேலும் இப்படிப் பொய்ச் சத்தியம் செய்வது யாருடைய குணம் என்றால் அல்லாஹ்விற்குப் பிடிக்காத நயவஞ்சகர்களின் குணமாகும்.
இவர்களுடைய இந்தச் சுபாவத்தைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:
அறிந்து கொண்டே பொய் சத்தியம் செய்கின்றனர். துன்புறுத்தும் வேதனையை அல்லாஹ் அவர்களுக் குத் தயாரித்துள்ளான். அவர்கள் செய்து கொண்டிருந்தது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 58:14,15)
எனவே நாம் ஒரு போதும் பொய்ச் சத்தியம் செய்யக் கூடாது.
பொய் சாட்சி கூறல்
ஏப்ரல் மாதத்தில் பிற மக்களை முட்டாளாக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் போது அந்த இடத்திற்கு அருகில் இருக்கும் சிலர் அந்தப் பொய்யர்களுக்கு ஆதரவு அளித்து, உதவி செய்யும் முகமாக பொய் சாட்சி பகர்கின்றனர். இதுவும் பெரும் பாவமான காரியமாகும்.
அபூபக்ரா (ரலி) கூறியதாவது: “பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள். “ஆம்! அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள்” என்று நபித் தோழர்கள் கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்விற்கு இணை வைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும் தான்” என்று கூறினார்கள். சாய்ந்து கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் பிறகு எழுந்து அமர்ந்து, “அறிந்து கொள்ளுங்கள். பொய் பேசுவதும், பொய் சாட்சியமும் (பெரும் பாவம் தான்). பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (பெரும் பாவம் தான்)” என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டே இருந்தார்கள். (நூல்: புகாரி 5976, முஸ்லிம் 126)
ஏமாற்றுதல்
இன்னும் சிலர் உண்மையுடன் பொய்யும் புரட்டும் சேர்த்துப் பேசுவார்கள். இதற்குப் பெயர் ஏமாற்றுதல், மோசடி ஆகும். உதாரணமாக ஏப்ரல் மாதத்தில் ஏமாற்றுவதற்காக, விபத்து நடந்து விட்டது என்றோ, இன்னார் அபாயகரமான (சீரியஸான) நிலையில் இருக்கிறார் என்றோ, மரணித்து விட்டார் என்றோ தொலைபேசி அல்லது தந்தி மூலமாகத் தகவல் அனுப்பி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஏமாற்றுகின்றானோ அவன் என்னைச் சார்ந்தவன் அல்ல. (நூல்கள்: முஸ்லிம் 147, திர்மிதீ 1236)
“மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக் கொடி ஒன்று நட்டப்படும். இது இன்னாரின் மகன் இன்னாரின் மோசடி’ என்று கூறப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 6178)
நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது: மோசடி செய்யும் ஒவ்வொருவனுக்கும் ஒரு அடையாளக் கொடி உண்டு. அது மறுமையில் அவனது புட்டத்திடம் நட்டப்படும். (நூல்: முஸ்லிம் 3271)
முஸ்லிமின் அடுத்த அறிவிப்பில் அவனுடைய மோசடிகளுக்குத் தக்கவாறு அது உயர்த்தப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
எனவே வல்ல அல்லாஹ்வுக்குப் பயந்து ஏமாற்றுதல், மோசடி செய்தல் ஆகியவற்றிலிருந்து முழுவதுமாக விலகி உண்மையாளராக நாம் திகழ வேண்டும்.
கேலி செய்தல்
மக்களில் சிலர் சிலரை ஏப்ரல் ஃபூல் ஆக்கிய பிறகு ஏளனமாகச் சிரிப்பது, கிண்டல் செய்வது, ஆர்ப்பரிப்பது என்று எப்படியெல்லாம் அவமரியாதை செய்ய முடியுமோ அனைத்தையும் கையாளுகின்றனர். இந்தக் கெட்ட குணத்திற்குச் சொந்தக்காரர்கள் யார் என்றால் இறை நிராகரிப்பாளர்கள் தாம். (ஏக இறைவனை) மறுப்போருக்கு இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப் பட்டுள்ளது. அவர்கள் நம்பிக்கை கொண்டோரைக் கேலி செய்கின்றனர். (இறைவனை) அஞ்சியோர் கியாமத் நாளில் அவர்களுக்கு மேலே இருப்பார்கள். அல்லாஹ், நாடியோருக்கு கணக்கின்றி வழங்குகிறான். (அல்குர்ஆன் 2:212)
தாராளமாக (நல் வழியில்) செலவிடும் நம்பிக்கை கொண் டோரையும், தமது உழைப்பைத் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளாதவர்களையும் அவர்கள் குறை கூறி கேலி செய்கின்றனர். அல்லாஹ் அவர்களைக் கேலி செய்கிறான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 9:79)
இந்த வசனங்களில் அல்லாஹ், நயவஞ்சகர்களின் பண்பைப் பற்றிக் கூறி விட்டு அவர்களுக்குரிய தண்டனையைப் பற்றியும் கூறுகின்றான். எனவே நாம் இந்தத் தீய பழக்கத்தைக் கைவிட வேண்டும்.
இழிவாகக் கருதுவது
இறுதியாக ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறரை ஏப்ரல் ஃபூல் (முட்டாள்) ஆக்கியவர்கள் ஏன் அவர்களைப் பார்த்து, கை கொட்டி ஏளனமாகச் சிரிக்கின்றார்கள்? ஏன் கேலி, கிண்டல் செய்து அற்ப சந்தோஷம் அடைகின்றார்கள்? என்று சிந்தித்தால் ஓர் உண்மை விளங்கும்.
அதாவது அவர்கள் தம்மைப் புத்திசாலியாகவும், உயர்ந்தவர்களாகவும் கற்பனை செய்து கொள்கின்றார்கள். எனவே ஆணவம் தலைக்கேறிய பிறகு மற்றவர்களை, தம்மை விட அறிவில் குறைந்தவர்கள், இழிவானவர்கள் என்று முடிவு செய்வதன் காரணத்தால் தான் அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தாமல், அனாவசியமாகக் கருதி, கேவலமாக நடத்தி இழிவு படுத்துகின்றனர்.
இதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பரிபூரண முஸ்லிம் யாரென்றால், எவரது நாவிலிருந்தும், கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற்று இருக்கின்றார்களோ அவர் தான். (நூல்: புகாரி 10, 6484)
இதல்லாம் ஜாலிக்காக செய்திகன்றோம் இதில் என்ன தவறு என்று சிலர் போலி வியாக்கியானம் கொடுப்பார்கள்.  உண்மையில் அவர்கள் தான் தன்னை யாரும் ஏப்ரல் ஃபுல் ஆக்கி விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பார்கள்.
தன்னை யாரேனும் ஏப்ரல் ஃபுல் ஆக்கி விட்டால்அது நமக்கு அசிங்கம் இழிவு என்று நினைக்கும் இவர்கள் பிறரை ஏப்ரல் ஃபுல் ஆக்கும் போது அதை மறந்து விடுவது ஏன்?
ஏமாற்றாதீர்கள்! ஏமாறாதீர்கள்!!

நன்றி: tntj.net
http://www.tntj.net/13406.html

Tuesday, 26 March 2013

அல்குர்ஆன்-ஹதிஸ் _கோம்பைதோட்டம் தெருமுனை பிரச்சாரம் _26032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  கோம்பைதோட்டம்   கிளை சார்பாக26.03.2013 அன்று கோம்பைதோட்டம்பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்.ஜபருல்லாஹ்  அவர்கள் "அல்குர்ஆன்-ஹதிஸ்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

"குர்ஆன் ஹதீஸ் பேனர்கள்தாவா _தாராபுரம் _24032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம்  கிளை சார்பாக
24.03.2013 அன்று தாராபுரம் அலங்கியம் பகுதியில் "குர்ஆன் ஹதீஸ் பேனர்கள்தாவா"  



4#3 அளவுள்ள 4 விழிப்புணர்வு பேனர்கள் 



வைக்கப்பட்டு சத்திய பிரச்சாரம் மக்களுக்கு செய்யப்பட்டது.

மருத்துவ உதவி _திருப்பூர் மாவட்டம் _24032013




திருப்பூர் மாவட்டம் சார்பில் 24.03.2013 அன்று திருப்பூர் M.S.நகர் பகுதியை சேர்ந்த சகோ.அப்துர்ரஹ்மான் அவர்களின் எலும்பு முறிவு சிகிச்சைக்காக
ரூ.4503 /= மருத்துவ உதவி  மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர்.

Monday, 25 March 2013

இஸ்லாத்தில்நுழைந்துவிட்ட தீமைகள் _தெருமுனை பிரச்சாரம் _தாராபுரம் _24032013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம்  கிளை சார்பாக
24.03.2013 அன்று தாராபுரம் அலங்கியம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்.ஹுசைன் அவர்கள் "இஸ்லாத்தில்நுழைந்துவிட்ட தீமைகள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். 

தவ்ஹீத் ஜமாத்தில்ஏன் இருக்கின்றோம் _கிளை நிர்வாகிகளுக்கு தர்பியா _உடுமலை _24032013




தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  உடுமலை  கிளை சார்பாக 24.03.2013 அன்று உடுமலை மஸ்ஜிதுத்தக்வாபள்ளியில் உடுமலை, மடத்துக்குளம்,ஆண்டியகவுண்டனூர்  "கிளை நிர்வாகிகளுக்கு தர்பியா"  நடைபெற்றது. 
சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள்.  "தவ்ஹீத் ஜமாத்தில் ஏன் இருக்கின்றோம் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
ஏராளமான கிளை நிர்வாகிகள்  கலந்துகொண்டனர்.

ப்ரிட்ஷா அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா -காலேஜ்ரோடு _23032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு  கிளை சார்பில்23.03.2013 அன்று பிறமத சகோதரர். ப்ரிட்ஷா   அவர்களுக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம்  வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன்அருளப்பட்ட வரலாறு _வாரந்திர பயான் _செரங்காடு _24032013






தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை சார்பாக 24.03.2013 அன்று செரங்காடு மர்கஸில்  வாரந்திர பயான்  நடைபெற்றது. 
சகோதரர்.ஆஜம்    அவர்கள். "குர்ஆன்அருளப்பட்ட வரலாறு     " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டனர்.

தொழுகையின் அவசியம் _பெண்கள்பயான் _செரங்காடு _24032013









தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை சார்பாக 24.03.2013 அன்று செரங்காடு பகுதியில் பெண்கள்பயான் நடைபெற்றது. 
சகோதரி. குர்ஷித்பானு   அவர்கள். "தொழுகையின் அவசியம்    " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான சகோதரிகள் கலந்துகொண்டனர்.


இஸ்லாத்தின் அடிப்படை குர்ஆன் ஹதீஸ்" _தெருமுனை பயான் _மங்கலம் _24032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 24-03-2013 அன்று மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரைமங்கலம் ஸ்டார்நகரில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் தவ்ஃபீக் (இமாம்) அவர்கள் "இஸ்லாத்தின் அடிப்படை குர்ஆன் ஹதீஸ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

சுரேஷ் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு _சுலைமான் ஆக _மங்கலம் _24032013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில் சுரேஷ் என்பவர் 24.03.2013 அன்று இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை சுலைமான் என மாற்றிக்கொண்டார் . அவருக்கு இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், துஆக்களின் தொகுப்பு, மாமனிதர் நபிகள் நாயகம், இஸ்லாமியக் கொள்கை, ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டன

பெண்கள் -அன்றும் இன்றும் _பெண்கள்பயான் -M.S.நகர் _24032013

திருப்பூர் மாவட்டம் M.S.நகர்  கிளை  சார்பாக 24.03.2013 அன்று  
M.S.நகர் பகுதியில்  பெண்கள்பயான்  நடைபெற்றது. சகோதரர்.பசீர் அவர்கள். "பெண்கள் அன்றும் இன்றும்   " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான சகோதரிகள் கலந்துகொண்டனர்.

அவசர சிகிச்சை இரத்ததேவைக்கு _இரத்ததானம் _நல்லூர் _24032013

 



திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பில் 
திருப்பூர் ரேவதி  மருத்துவமனையில்
அவசர சிகிச்சை பெற்று வரும் சகோதர சகோதரிகளின்  
அவசர இரத்ததேவைக்கு   24.03.2013 அன்று  
திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை TNTJ மருத்துவ சேவை அணி
மூலமாக சகோதரர்.செய்யது பாஷா அவர்களின்  O+ இரத்தம் ஒரு யூனிட்,
சகோதரர்.சித்தீக்  அவர்களின்  B+ இரத்தம் ஒரு யூனிட்,
சகோதரர்.மயூனுத்தீன் அவர்களின்  A1+ இரத்தம் ஒரு யூனிட்
திருப்பூர் ரேவதி  மருத்துவமனை இரத்த வங்கியில்
 இரத்ததானம் வழங்கப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்

"தொழுகை" _பெண்கள்பயான் _ நல்லூர் _24032013

திருப்பூர் மாவட்டம் நல்லூர்  கிளை  சார்பாக 24.03.2013 அன்று நல்லூர்  கவுண்டர் காம்பவுண்ட் பகுதியில்  பெண்கள்பயான்  நடைபெற்றது.  சகோதரர்.ராஜா அவர்கள். "தொழுகை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான சகோதரிகள் கலந்துகொண்டனர்.

Sunday, 24 March 2013

பெண்கள் அன்றும் இன்றும் _பெண்கள்பயான் _பெரிய தோட்டம் _24032013

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம்  கிளை  சார்பாக 24.03.2013 அன்று பெரிய தோட்டம் பகுதியில்  பெண்கள்பயான்  நடைபெற்றது.  
சகோதரி. ஆலிமா நபிஸா  அவர்கள். 
"பெண்கள் அன்றும் இன்றும்   " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான சகோதரிகள் கலந்துகொண்டனர்.

கல்லூரி மாணவர்,சகோதரர். டேவிட் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _காலேஜ்ரோடு _19032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு  கிளை சார்பில் 19.03.2013 அன்று (பிறமத )கல்லூரி மாணவர்,சகோதரர். டேவிட்  அவர்களுக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம்  வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.